பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில் கை எலும்பு முறிவு – தலைமை ஆசிரியர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில் கை எலும்பு முறிவு – பெற்றோர் காவல் நிலையத்தில் புகார். தலைமை ஆசிரியர் கைது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாப்பாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் தா.பேட்டை ஒன்றியம் ஜடமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், கோகிலா ஆகியோரின் மகன் ஜெகன் (15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22 .11.2024 பள்ளி வளாகத்தில் மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது தவறுதலாக விளக்குமாறு குச்சிகள் கட்டில் இருந்து உருவியதில் தவறுதலாக மாடியில் இருந்து கீழே நிறுத்தி இருந்த தலைமையாசிரியரின் கார் மீது விழுந்துள்ளது.
அவ்வழியே சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் (60) கார் மீது விளக்குமாறு குச்சிகள் விழுவதை பார்த்து உள்ளார். இதையடுத்து மாடியில் உள்ள வகுப்பறைக்கு வந்து விளக்குமாரை கார் மீது போட்டது யார் என கேட்டு விசாரித்துள்ளார்.
மாணவன் ஜெகன் தவறுதலாக மாடியில் இருந்து விளக்குமாறு கீழே விழுந்ததாக கூறியுள்ளார்.
இதில் கோபமடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மாணவன் ஜெகனை அடித்துள்ளார்.
இதில் மாணவன் ஜெகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து மாணவன் பெற்றோருக்கு அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மாணவனை தொட்டியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பின்னர் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பெற்றார்.
அதனை தொடர்ந்து மாணவனின் தந்தை செல்வராஜ் (48) பள்ளி தலைமையாசிரியர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் 296 (B), 118 (1), 351 (2), 75 உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து தலைமையாசிரியர் சந்திரமோகனை இன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.