in

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பாய்லர் இயந்திரம் துவக்கி வைத்தல் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பாய்லர் இயந்திரம் துவக்கி வைத்தல் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்திய, உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பாய்லர் இயந்திரம் துவக்கி வைத்தல் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி 51.70லட்சம் மதிப்பீட்டில் புதிய பாய்லர் இயந்திரங்களை துவங்கி வைத்தார். தொடர்ந்து முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 33 அங்கத்தினருக்கு 27 லட்சம் மதிப்பீட்டிலும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு 5.90லட்சம் மதிப்பீட்டிலும் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு 18 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் 102.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுவையில் நெசவுத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவிக்க காரணம் திருபுவனம் தான், தீபாவளி போனசில் 40பைசா வழங்கிய அமைச்சருக்கு இது ஒரு விதத்தில் பாராட்டுவிழா தான் மீனவர்களுக்கு வழங்குவதை போல் நெசவாளர்களுக்கு மழைகாலத்தில் உதவி தொகை வழங்க வேண்டும் தேக்கமடைந்த பட்டுப்புடவைகளுக்கு 15%தள்ளுபடி வழங்க வேண்டும் எனக்கூறினார்.

தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில்..
நான் அமைச்சராக பொறுப்பேற்போது முதல்வர் கைத்தறித்துறையை எனக்கு தந்தார் திமுக அரசு பொறுப்பேற்கும் போது நெசவாளர்கள் காக்கப்படுவார்கள் அந்த அடிப்படையில் தற்போது செயல்பட்டுவருகிறது.

நெசவாளர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது தமிழக முதல்வர் தான், கொரோனா காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி அமைச்சர்கள் நியமித்து திறம்பட செயல்பட வைத்தது தமிழக முதல்வர் தான், ஒவ்வொறு மாநிலங்களும் நம் மாநிலத்தை பார்த்துதான் மாதிரியாக நடத்துகிறார்கள். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இப்பகுதி நெசவாளர்களின் நலம் கருதி அவர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா கால கடன் தொகையை பொது நிதியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் நெசவாளர்களின் கோரிக்கையை பரிந்துரை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இந்த ஆட்சி என்பது சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றிக் காட்டும் இதற்கு உதாரணம் தான் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க கூடாது என்பதில் முழு கவனத்தோடு செயல்பட்டு கடந்த கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் பள்ளி கல்வி துறையின் சார்பில் வழங்கப்படும் பள்ளி மாணவ மாணவியருக்கான விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் படம் இடம்பெற்றதையும் மாற்று கட்சி என்று பார்க்காமல் உடனடியாக வழங்கி சிறப்பு செய்தவர் தமிழக முதல்வர் என கூறினார்.

இந்நிகழ்ச்சி மாநிலங்களவை எம்.பி. கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்க செயலாட்சியர் கிரிதரன், கைத்தறித்துறை செயலர் அமுதவள்ளி இயக்குநர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 புதிய வகுப்பறையை தமிழக முதல்வர் காணொளி காட்சி

மங்கல இசையுடன் தொடங்கியது சதய விழா