தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் அரசு கரூவூலகத்தில் ஒப்படைப்பு
புதுச்சேரியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மது மற்றும் பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக புதுச்சேரி எல்லை பகுதிகளில் காவல்துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி-திண்டிவனம் சாலை ஜிப்மர் எல்லைப் பகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும், இ.எம். கணேசன், காவல்துறையினருமான துணை உதவி ஆய்வாளர் அகிலன், ஜான் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாஜிஸ்டிக்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என சுமார் ரூ.3.54 கோடி மதிப்பிலான நகைகளை 28 பண்டல்களாக இருந்தது. விசாரணையில் அவர்கள் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நகைக்கடைக்காக எடுத்து வந்ததாக கூறினர்.
மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் புதுச்சேரியில் உள்ள அரசு கணக்கு மற்றும் கருவுலாக அலுவலகத்திற்கு கொண்டு வந்து சீல் வைத்தனர்.
மேலும் இது நகைகள் என்பதால் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தகைகள் இரவு நேரம் என்பதால் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை உரிய ஆவணங்களை வணிகவரித்துறை அதிகாரிகளிடம் காண்பித்தால் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படும்.
இந்த சோதனையில் காவல் அதிகாரிகள் போலீஸ்காரர் வினோத்குமார், பறக்கும்படை அதிகாரிகள், ஓட்டுனர் மணிமாறன், பல்நோக்கு பணியாளர் ஈஸ்வரதாஸ், சங்கர், கருணாகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.