ஹாரா movie review….மகளின் மரணத்திற்காக போராடும் தந்தை
16 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் தனது ஹீரோசத்தை திரையில் காட்டிஇருக்கிறார் மோகன்.
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன், அனுமோல் இவர்களுடன் யோகி பாபு, வனிதா விஜயகுமார், மைம் கோபி, மொட்டை ராஜன் உள்ளிடோர் நடிப்பில் நேற்று வெளியான ஹாரா… திரைபடத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
ஒரு காலத்தில் மோகன் படம் வெள்ளிவிழா கொண்டாடாமல் போகாது இவர் மைக் பிடித்து பாடும் ஸ்டைலுக்காகவே பெண் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி ஓட வைத்தவர்.
ரஜினி கமல் படங்களைத் தாண்டி அதிக வசூல் செய்யும் படம் மோகன் உடையது இவர் படத்தின் பாடல்கள் அனைத்து First கிளாஸ். உச்சத்தில் இருக்கும் போதே திடீரென்று திரையில் இருந்து காணாமல் போனவர்.
தற்பொழுது ஹாரா... என்ற ஆக்சன் மூவியில் நடித்துள்ளார். 80ஸ் நடிகர்களான மோகன் மற்றும் ராமராஜன் Second இனிங்ஸ்…இல் ஒரு ரவுண்டு வந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி இறங்கி இருக்கிரார்கள்.
ராமராஜனின் சாமானியன் படம் உத்திகிட்ட நிலையில் ஹாரா… படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்திருகிறார்கள். தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை விதவிதமான கெட்டப்புடன் வந்து தீத்துக்கட்டுகிறார் மோகன்.
மிடில் கிளாஸ் பாசமுள்ள தந்தையாக மோகன் பின்னி எடுத்திருக்கிறார். சோகமான முகத்தையே பார்த்து பழகிப்போன நமக்கு இவரின் ஆக்சன் மற்றும் அதிரடி காட்சிகள் புதுமையாக இருக்கிறது.
அநியாயத்திற்காக போராடும் காட்சிகளில் மோகன் செகண்ட் ரெண்டில் ஜெயித்தே …ஆக வேண்டும் என்று தன் முகத்தில் வெறித்தனத்தை காட்டுகிறார். மனைவியாக வரும் அனுமோல் நடிப்பு அருமை.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றாலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தீபா சங்கர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மோகனை ஹீரோ வாக பார்த்த ரசிகர்கள் ஹாரா… வை பற்றி பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை கொடுத்திருக்கிறார்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்..
குறைகள் அடுத்தடுத்து மர்மமாக நடக்கும் கொலையை சுற்றியே கதை நகர்கிறது.. சுவாரசியம் மிஸ்ஸிங் திரைகதையில் உயிரோட்டம் இல்லை
பாடல்.. மனதை தொட வில்லை பின்னணி இசை… ஈர்க்க இல்லை…