in ,

புலம்பி தள்ளும் ஹர்திக் பாண்டியா


Watch – YouTube Click

புலம்பி தள்ளும் ஹர்திக் பாண்டியா

” ச்சை… எதுவுமே சரியா அமையல ”

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன் படி பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சில் திணறியது. இருப்பினும், கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயரின் சிறப்பான அரை சதத்தால் கொல்கத்தா அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தாலும் போராடும் இலக்கான 169 ரன்களை நிர்ணயித்தது.

170 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி தொடர்ந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மட்டும் ஒரு முனையில் சிறப்பாக அரை சதம் கடந்து விளையாடினார். ஆனாலும் அவரது ஆட்டமிழப்புக்கு பிறகு மும்பை அணி முற்றிலும் போட்டியில் இருந்து தோல்வியை தழுவியது. இறுதியில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி 12 வருடங்களுக்கு பிறகு மும்பை மண்ணில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு தோல்வியடைந்ததன் காரணம் குறித்து மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். அவர் பேசிய போது,”பேட்டிங் தான் இன்று எங்களுக்கு சற்று கடினமாக அமைந்தது. மேலும் ஒரு நல்ல கூட்டணி அமைக்க நாங்கள் சிரமப்பட்டோம், தொடர்ந்து விக்கெட்டுகளையும் இழந்தோம், எதுவுமே எங்களுக்கு இன்று உருப்படியாக அமையவில்லை. எங்களுக்கே எங்கள் அணியின் மீது நிறைய கேள்விகள் இருக்கிறது. ஆனால் அந்த பதில்களைக் கண்டறிய சிறிது நேரம் எடுக்கும் என்று நான் நினைக்கிறன்.

ஆனால் இப்போதைக்கு எதுவும் அதிகம் சொல்வதற்கில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு பிட்ச் சற்று சிறப்பாக இருந்தது, மேலும் மைதானத்தில் பனியும் இருந்தது. நாங்கள் இதிலிருந்து எப்படி சிறப்பாக விளையாடலாம் என்ற திறன்களை கண்டறிவோம்.

இதுபோன்ற சமயங்களில், தொடர்ந்து சண்டையிட வேண்டும் என்று நான் எப்போதும் நினைவு கூறுகிறேன். இதை தாண்டி செல்வது கடினமாக இருந்தாலும், நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். சவால்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும், அவை நம்மை சிறந்து விளங்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன”, என்று போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்

லண்டனில் சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்