தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அறிவித்து தனது அரசியல் பிரவேசத்தை அதிரடியாக பிரகடனப்படுத்தினார்.
இவர் கட்சி பெயர் ஆரம்பித்த சில நாட்களிலேயே இலக்கண பிழை இருப்பதாக வலைதளங்களில் பலர் சுட்டிக்காட்ட, தனது கட்சி பெயரில் ‘க்’கை சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என திருத்திக் கொண்டார்.
விஜய் மேலும் தனது கட்சியை வளர்க்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய போது விரைவில் தனது கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றையும் வெளியிடுவேன் என்று கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே டி வி கே (TVK) காட்சியின் சர்வர் டவுன் ஆகியது. ஆனால் அடுத்த நாள், கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்கள் விஜய்யின் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
தற்பொழுதும் உறுப்பினர் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை தளபதி விஜய் நிறுத்தி விட்டார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் அதில் எந்த உண்மையையும் இல்லை இது வெறும் வதந்தி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம் என்ற பொய்யான தகவல் வெளியானதற்கு காரணம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தால் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது, எனவே மக்களை சந்தித்து முகாம் அமைத்து உறுப்பினர் சேர்க்கை பணி மட்டும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது என்று விஜய் அறிவித்தார். கட்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தனது கட்சியில் இணையத்தின் மூலம் சேரலாம் இது போன்ற’ பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது எக்ஸ் தலத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.