in

பாபநாசம் அருகே ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்..

பாபநாசம் அருகே ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்..

ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள ஹஜ்ரத் பக்ருதீன் ரஜ்ஜப் அலிசா ஷாஹிப் மற்றும் பண்டாரவாடையில் அமைந்துள்ள கல்கல்திவான், சாம்பல்திவான், பதுரதிவான் ஆகியோரது ஹந்தூரி உற்சவமும் கொடியேற்று விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கப்ருக்கு சந்தனம் பூசி, ரவ்லா ஷரீபில் தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, ரவ்லா ஷரீபில் பாத்திஹா ஓதி மீண்டும் தர்காவை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா முத்தவல்லி முகம்மதுஆரிப் தலைமையிலான நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

What do you think?

திருச்சியிலிருந்து சென்ற ஏர் ஏசியா விமானத்தில் 4 பேர் சீட்டாடி தொந்தரவு

திருவிடைமருதூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார்.