in

நடிகர்கள் ராமராஜன் மற்றும் நளினி இணைந்துவிட்டார்களா? ராமராஜன் விளக்கம்

நடிகர்கள் ராமராஜன் மற்றும் நளினி இணைந்துவிட்டார்களா? ராமராஜன் விளக்கம்

 

நடிகர்களான ராமராஜன் மற்றும் நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழுகின்றனர்.

திடீரென்று இவர்கள் இருவரும் மனமாறி பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்வதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது ராமராஜனை பிரிந்த பிறகும் நளினி இன்னும் அவரை நேசிப்பதாகவும் அவரை விட்டு பிரிந்ததை இன்றும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று பல பேட்டிகளில் கூறியிருகிறார்.

நளினி தற்போது சீரியல்களில் பிஸி …யாக இருக்கிறார். மகள் அருணா சுப்பிரமணியன் வழக்கறிஞர் மற்றும் அவரது மகன் அருண் Auditor...ராக பணிபுரிகிறார்கள்.

நளினியின் மகள் அருணா ஹோட்டல் அதிபர் ராமச்சந்திரனை திருமணம் செய்திருக்கிறார்.. இந்த திடிர் வதந்திக்கு தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராமராஜன் நடக்காத ஒரு விஷயத்தை ஏன் இப்படி பேசுகின்றனர் என்று எனக்கு தெரியவில்லை.

நானும் நளினியும் இணைந்து விட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை இனிமேல் அது நடக்கவே முடியாத விஷயம் நாங்கள் இருவரும் பிரிந்து 25 ஆண்டுகளை கடந்து விட்டது நான் தனியாக வாழ பழகிக் கொண்டேன்.

இது போன்ற சர்ச்சைகளால் எங்கள் இருவரின் மனங்களும் வருத்தமடைகிறது பிள்ளைகளும் இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

எனவே இது போன்ற புரளியை கிளப்புகிறவர்கள் புரிந்து கொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

What do you think?

எந்த நடிகரும் செய்யாத விஷயத்தை செய்த சல்மான்கான்

கமல் படத்தில் நடித்தவர் இறந்துவிட்டாரா?