in

அந்த படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்

அந்த படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்

ரஜினி நடித்த அண்ணாத்தை படம் கலையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அண்மையில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை மீனா வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தற்போது குஷ்பூ..வும் தன் கதாபாத்திரம் குறித்து அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய படங்களை நான் நிராகரித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு உதாரணம் ரஜினிகாந்தின் அண்ணாத்தை படம் என்னிடம் சொன்னது போல் என்னோட கதாபாத்திரம் அந்த படத்தில் இல்லை அண்ணாத்த படத்தில் நானும் மீனாவும் இணைந்து நடித்தோம்.

படத்தில் நாங்கள் இருவரும் கதாநாயகிகள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது ரஜினிக்கு ஜோடி வேறு யாருமில்லை படம் முழுதும் நீங்கள் இருவர் தான் என்றும் கூறி சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ரஜினிக்கு ஜோடியாக இன்னொருவர் வந்தார்.

எனது கதாபாத்திரம் காமெடியாக மாற்றப்படுவதை அறிந்தேன், படத்தை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருந்தது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை எனக்கு தெரியவில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

What do you think?

பொங்கல் சிறப்பு தொகுப்பில் நெட்டி மாலைகளை வழங்க கோரிக்கை

நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை…. சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு