தீபாவளி பண்டிகைக்காக குறைந்த விலையில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்…
தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தீபாவளி பட்டாசு விற்பனைக்காக கூட்டுறவு அங்காடி கடையை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் இன்று தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை துராப்அலி தெருவில் அமைந்துள்ள பட்டாசு விற்பனைக்கான கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதிபன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தீபாவளி விற்பனைக்கான பட்டாசுகளையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார். வருடந்தோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை வழக்கமாக நடைபெறும். இங்கு விற்கப்படும் பட்டாசுகள் விலை மலிவாகவும், தரம் உயர்ந்ததாகவும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு அங்காடியில் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பட்டாசை நேரடியாக எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை 14 இடங்களில் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டாசு கொள்முதல் செய்திருப்பதாகவும்
சந்தை விலையை விட பட்டாசு விலை குறைவாக இருப்பதாகவும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டுக் கொண்டார்.
ஸ்டேண்டர்ட்டு, இரட்டை கிளி ஆகிய தரமுள்ள பட்டாசு நிறுவனங்களின் பட்டாசுக்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு ரூ.70 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கிப்ட் பாக்ஸ் ரூ.700 முதல் ரூ.2000 மதிப்பு வரை விற்பனைக்கு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்தல் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்தினார்.