தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியானது…. கூலி….
தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியானது…. கூலி…. சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த அருமையான டைட்டில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 என்ற படத்தில் டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் ஏகபோகமாக யோசித்து வைத்த டைட்டிலை எல்லாம் பொய்யாக்கி கூலி என்று சப்பையாக ஒரு டைட்டில் வைத்துள்ளார்.
லோகேஷ் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய மூன்று படங்களில் அவருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து பணிகளை மேற்கொண்டவர் ரத்தினகுமார் இந்த படத்திலும் அவரது கூட்டணி தொடர வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் சன் பிக்ச்சர் கொடுத்த பிரஷரால் ரத்தினகுமார் கூலி படத்தில் இணையவில்லை என்று தகவல் வெளியானது.
ஆனால் ரத்தினகுமார் தற்பொழுது லோகேஷ் தயாரிப்பில் படம் இயக்க உள்ளதால் அவர் ரஜினி படத்தில் பணியாற்ற மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் ரத்தினகுமார் இயக்குவதாகவும், லாரன்ஸ் நடிக்கும் படமும் லோகேஷ் கனகராஜின் கதைதனாம் ஆனால் திரைக்கதை மட்டும் ரத்தினகுமார் அமைத்து இயக்க உள்ளார்.
ரத்தினகுமாருக்கு பதிலாக பாக்யராஜ் கண்ணன் கூலி.. யில் இணைய போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பென்ஸ் படத்தில் இருந்து ரத்தினகுமார் நீக்கப்பட்டதால் அவருக்கும் லோகேஷ் கனகராஜ்…இக்கும் பிரச்சனை என்று தொடர்ந்த குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் படியாக இயக்குனர் ரத்னகுமார் நேற்று கூலி படத்தின் டைட்டில் டீசரை பார்த்து எக்ஸ்சலத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அந்த பதிவில் முடிச்சிடலாமா…. கூலி…. சூப்பர் ஸ்டார் படத்திற்கு என்ன ஒரு அருமையான டைட்டில், தங்கத்தை ஹைலைட்டாக காட்ட பிளாக் பயன்படுத்தி இருப்பது தொடங்கி, இசை தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அருமை இந்த படம் நாலு இலக்க பாக்ஸ் ஆபிஸ் நம்பரை எட்ட வாழ்த்துக்கள் லோகேஷ் என்று கூறியுள்ளார்.
இந்த டீம்..மை பார்க்கும் பொழுது சன் பிக்சர்ஸ் அணியின் டாப் ஆர்டரை பார்ப்பது போல் உள்ளது முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவுத்துள்ளார்..