in

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயர்ந்த விவகாரம் விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயர்ந்த விவகாரம் விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

 

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயர்ந்த விவகாரம் காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான முனையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ், ஆகியோர் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய்க்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இன்று சோதனை நடத்தினோம்.

27 ஆயிரம் பயணிகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, சென்னை, மதுரை, கோவை நான்கு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டு பத்து படுக்கைகளுடன் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

டெங்கு பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாமல் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நான்கு பேர் மட்டுமே இறந்துள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது.

நேற்று கூட மருந்தாளுனர்கள் 946 பேருக்கு பணி நியமன ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் தொடர்ந்து முதல்வர் ஆணைப்படி நிரப்பும் பணியை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் சைனா நூடுல்ஸ் அமேசான் மூலம் சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ் சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உணவு மருந்து மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி காலாவதியான 800 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் டெங்கு பாதிப்பு குறித்து கூட்டம் நடத்தியதை செய்தியாளர்களிடம் தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய பொழுது அது குறித்து பேசினார். திமுக கட்சியில் அதிருப்தி உள்ளதாகவும் நேற்று நடந்த மேற்கு மாநகர உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட பொழுது அதிருப்தியெல்லாம் ஒன்றுமில்லை.

குடும்பத்தில் ஒருவர் வருத்தப்படுவதும் ஒருவர் சந்தோஷப்படுவதும் இருக்கும் பொறுப்பாளர்கள் அதனை பார்த்து சரி செய்வோம் நிச்சயம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் என செய்தியாளர்களை பார்த்து பதில் அளித்தார்.

What do you think?

திருச்சி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் – 10 பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து ஜாலி பயணம்

லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் – அமைச்சர் நேரு பேச்சு