in

திருச்சியில் ஒரு மணி நேரமாக கனமழை காவல் நிலையத்தில் புகுந்த மழை நீர்


Watch – YouTube Click

திருச்சியில் ஒரு மணி நேரமாக கனமழை காவல் நிலையத்தில் புகுந்த மழை நீர்

திருச்சியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ள நீர் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாலையில் வெளிச்சம் இருக்கும் பொழுது முகப்பு விளக்குகளை போட வேண்டிய நிலையில் இருந்தது.

மேலும் முக்கிய சாலைகளில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்தாலும் அது தண்ணீர் தேங்கி இருப்பது வாகன ஓட்டுகளுக்கு தெரியாமல் கீழே விழும் நிலைக்கு ஆளானார்கள்.

மிக முக்கியமான திருச்சி மாநகரில் ஹீபர் ரோட்டில் உள்ள காவல் நிலையம் உள்ளே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.காவல் நிலையத்துக்கு உள்ளே மழை நீர் புகுந்து நாற்காலி மேஜிக்கல் நீரினால் சூழப்பட்டது.

மழை நீரை பணியில் இருந்த காவலர்கள் வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் முக்கியமான சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 810 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல்

அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி