மாகே பிராந்தியத்தில் கனமழை.. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம்.
மாகே பிராந்தியத்தில் கனமழை.. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம். படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பாதுகாப்பு இடத்துக்கு இடமாற்றம்…
புதுச்சேரியின் மாகே பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ளது. கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மாகேவிலும் தொடர் மழை பெய்கிறது.
அதனால் கடந்த மூன்று நாட்களாக அங்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக மூலகடவு, பந்தக்கல் ஆகிய பகுதிகளில் அதிகளவு வெள்ளநீர் கரைபுரண்டோடியது. 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அங்கிருந்தோரை படகுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோர் மீட்டனர்.
அவர்கள் அனைவரும் தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.இருப்பினும் பாதுகாப்பு மையங்களில் உணவு உட்பட நிவாரண பொருட்களுடன் தேவையான ஏற்பாடுகளை மாகே பிராந்திய அதிகாரிகள் செய்துள்ளனர்.
தொடர் மழையால் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மாகே பிராந்தியம் முழு பாதுகாப்பில் இருப்பதால் மண்டல நிர்வாகி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.