சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் வகையில் பெய்த கனமழை
தென்காசியில் இடியுடன் கூடிய கனமழை – சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் வகையில் பெய்த கனமழையினால் மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலன பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்த நிலையில் மாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் மந்தமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது.
தென்காசி, மேலங்கம், குத்துக்கல்வலசை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெகுவாக பெய்ததது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அதனை தணிக்கும் வகையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.