சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் துர்நாற்றத்துடன் அதிக புகைமூட்டம் ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிப்பு, குழந்தைகள் முதியவர்கள் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டதாக பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு.
சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு சி, தண்டீஸ்வரர் நல்லூர் பகுதியில் அமைந்துள்ளது சிதம்பரம் நகர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்ட வருகிறது சில சமயங்களில் குப்பை கிடங்கு தீப்பிடித்து அதிக அளவு புகைமூட்டம் வெளியேறுவதால் ஓமக்குளம், எஸ்,ஆர், நகர், ஜமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் அவ்வப்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இரவு நேரத்தில் துர்நாற்றத்துடன் புகை மூட்டம் அதிக அளவு வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இதுபோன்று இனிமேல் நடக்காது என பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர், குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை எடுக்க முயற்சித்த போது அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பேருந்து ஓட்டுனரை தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் குழந்தைகள் முதியவர்கள் இதய நோய் உள்ளவர்கள் என அனைவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மேலும் பல்வேறு தொற்றுநோய் ஏற்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் உடனடியாக நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்படும் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.