in

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

 

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பொருட்களை வாங்குவதற்கும், ஜவுளி எடுப்பதற்கும் பட்டாசு உள்ளிட்ட தீபாவளி பொருட்களை வாங்குவதற்கும் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்காக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் காரணமாக மயிலாடுதுறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரின் முக்கிய கடைவீதி பகுதிகளில் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்ணார் தெரு காந்திஜி ரோடு கச்சேரி ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கண்ணார் தெரு நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறைவான காவல்துறையினர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

What do you think?

BOYCOTT SAIPALLAVI … அமரன் படத்திற்கு எதிராக கிளம்பும் பூகம்பம்