in

ஹெலிகாப்டர் விபத்து ஈரான் அதிபர் உயிரிழப்பு


Watch – YouTube Click

ஹெலிகாப்டர் விபத்து ஈரான் அதிபர் உயிரிழப்பு

 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் ரைசி மற்றும் அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஈரான் அதிபர் சென்ற இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதற்கட்டமாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த மீட்புப் படை துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

15 மணி நேரம் மீட்பு பனி நடந்துவந்த நிலையில், ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கிடைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விபத்தில் யாருமே உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான்-அஜர் பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி திரும்பி சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில் அதிபர் இப்ராஹிம் ரைசி, அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும், 9 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

சித்தாமூர் ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்