in

ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திடீர் ஆய்வு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திடீர் ஆய்வு

 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் அரசு( பி.எட்) கல்வியியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திடீர் ஆய்வு..மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்…

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இயங்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

வகுப்பறைக்கு சென்று மாணவிகளிடம் கலந்துரையாடினார், விடுதி வசதி , அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் , தொடர்ந்து ஒரத்தநாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் (பிஎட்) கல்லூரிக்கு சென்று வருகை பதிவேடு, உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்… ஆய்வின் போது தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கல்லூரி முதல்வர், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..உயர்கல்வித்துறை அமைச்சர் திடீரென கல்லூரிக்கு வருகை தந்து கலந்துரையாடியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

What do you think?

திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்….. திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்ரியா

4 அடி உயரமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை பத்திரமாக வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது