in

திருவிடைமருதூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார்.

திருவிடைமருதூரில் தொகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கும்பகோணத்தில் இருந்து தனியாக பிரித்து திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி செழியன் இன்று துவக்கி வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான திருவிடைமருதூர் திருபுவனம் ஆடுதுறை திருப்பனந்தாள் அணைக்கரை பந்தநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய மின் இணைப்புகள் மற்றும் அதிக மின் திறன் கொண்ட இணைப்புகள் பெறுவதற்கும் மின்வாரியம் தொடர்பான விசாரணைகளுக்கும் கும்பகோணம் செல்ல வேண்டிய நிலை இதுநாள் வரை இருந்து வந்தது..

இது நாள் வரை கும்பகோணத்தில் இயங்கி வந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று திருவிடைமருதூரில் இன்று துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவிடைமருதூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் சு கல்யாணசுந்தரம் எம்பி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகம் திருவிடைமருதூரிலேயே துவக்கி வைத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

பாபநாசம் அருகே ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்..

ஊராட்சி அலுவலகத்தில் ஆதீனம் அமர்ந்ததால் பரபரப்பு.