in

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி


Watch – YouTube Click

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (44). இவர் மின்வாரியத் துறையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பெரம்பூர் பகுதியில் இருந்து கடக்கம் வழியாக நல்லத்துக்குடி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது கடக்கம் பாலம் அருகே மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் மகாலிங்கத்தை வழிமறித்து தாக்கி அவர் அணிந்திருந்த மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.

இதனை அடுத்து மகாலிங்கம் பெரம்பூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் நாகவல்லி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று மது போதையில் இருந்த இளைஞர்களை தேடி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பம்ப்செட் கொட்டகையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் போதையில் இருந்த நான்கு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை சோழசக்கரநல்லூர் பகுதியை சேர்ந்த சுல்தான் (20), மயிலாடுதுறை சேர்ந்த அபிநாத்(19), மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து மூன்று பவுன் செயின், 2000 ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சுல்தான் (20), அபிநாத்(19) ஆகிய இரண்டு பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையார் கிளை சிறையில் அடைத்தனர்.

17 வயது சிறுவர்கள் இரண்டு பேரையும் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், வழிப்பறிச் சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளிகளை கைது செய்த பெரம்பூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

ஜோதிகா அரசியல் பிரவேசம்?

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழை மக்கள் மகிழ்ச்சி