யானை சிலைகள் மாயமான விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை விசாரணை
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழமையான கொடிமரங்கள், யானை சிலைகள் மாயமான விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை கோயிலில் ஆய்வுஊழியர்களிடம் விசாரணை
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குறியது. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமண மண்டபத்தில் இருந்த இரு யானை சிலைகள் மற்றும் கும்பாபிஷேக பணியின் போது அகற்றபட்ட பழைமையான இரு கொடி மரங்கள் மாயமானதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்தார்.
இதுகுறித்து கடந்த சில முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கோயிலில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆய்வு செய்து, கோயில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து இணை ஆணையர் செல்லதுரையிடம் கேட்ட போது, ‘ கோயிலில் கொடிமரம், சிலை மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் செயல் அலுவலர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோயிலில் ஆய்வு செய்து, பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தேன். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் முழு விவரம் தெரியவரும், என்றார்.