in

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா : உலக அமைதிக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

தொடர்ந்து ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை பவனி மற்றும் ஆராதனை நடைபெற்றது. சீர்காழி பங்குத்தந்தை டோனி அடிகளார் நற்கருணையின் மகத்துவம் குறித்து மறையுரையாற்றினார். புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காகவும், மக்கள் நலன்களுக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.

எருக்கூர் பங்குத்தந்தை இருதயசாமி அடிகளார் நற்கருணை ஆசீர் வழங்கினார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

What do you think?

குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயரத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு கடை வைத்துக் கொடுத்து உதவிய சமூக சேவகர் பாராட்டு