in

புனிதமான விஷயம்…இல்லை… குழந்தை குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே


Watch – YouTube Click

புனிதமான விஷயம்…இல்லை… குழந்தை குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

 

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே தமிழில் தோணி என்ற படத்தில் நடித்தவர்.

கார்த்திக்..உடன் ஆளினால் அழகுராஜா, ரஜினியின் கபாலி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கலுக்கு பிரபலமானார்.

தமிழ்நாட்டில் பிறந்த மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்த இவர் கங்கனா ரனாவத் போல் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தைரியமாக பேசி வம்பில் மாட்டி கொள்வார்.

லண்டனுக்கு படிக்க சென்றவர் Benedict Taylor என்பவருடன் Living Together..ரில் இருந்தவர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகள் கழித்து தற்பொழுது கன்சிவ்…வாக இருப்பவர், குழந்தை பிறக்க போகும் விஷயத்தை வெளியிடாமல் Silent….டாக இருந்தவர் பி எஃப் ஐ திரைப்பட விழாவிற்கு சென்ற போது மீடியா…விடம் மாட்டி கொண்டார்.

திரைப்பட விழா…வின் போது எடுத்த புகைப்படம் இணையத்தில் கசிந்து. கன்சீவ் ஆக இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்த பிறகு. அது குறித்து பேட்டி கொடுத்திருக்கிறார், எனக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லை அதற்காக நான் திட்டமிட்டதும் இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனை இது. குழந்தை பெற்றுக் கொள்வது எவ்வளோ கடினமாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவும் இல்லை என் உடலில் ஏற்பட்ட இந்த மாற்றங்களை நினைத்து பயமாக இருக்கிறது.

நிம்மதியாக நான் தூங்கியது இல்லை, ஒரு பெண் கர்ப்பம் அடைவது புனிதமான விஷயம் என்று கூறுகிறார்கள், அது அப்படி அல்ல என்ற உண்மையை உங்களிடம் யாரும் கூறியிருக்க மாட்டார்கள்.

இந்த நேரத்தில் நான் அனுபவிக்கும் சிரமங்களை குறிப்பிட முடியவில்லை நான் திரை பட விழாவில் பங்கேற்காமல் இருந்தால் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரிந்திருக்காது.

இவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு இவரது பேச்சுக்கும் இவர் படங்களில் நடித்த கதாபாத்திரங்களும் சம்பந்தம் இல்லையே …எல்லாம் வெறும் நடிப்பு தானா என்று கமெண்ட் செய்கிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

விவாகரத்து குறித்து வீடியோ வெளியிட்ட ஏ. ஆர். ரகுமான் மனைவி

ராஷ்மிகா செல்பி….கன்னத்தில் பளார்…அதிர்ந்த அரங்கம்