போட்டோகிராபர் வீடியோகிராபர் நல சங்கத்தின் சார்பாக அஞ்சலி
புதுச்சேரி மாநில போட்டோகிராபர் வீடியோகிராபர் நல சங்கத்தின் சார்பாக சிறுமி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் கடந்த வாரம் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார். இந்த அதிர்ச்சி தகவலால் புதுச்சேரி மாநிலமே சோகத்தில் மூழ்கியது காவல்துறை முதல் கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றவாளி இருவரை கைது செய்துள்ளதாகவும் அதில் குற்றவாளிக்கு வயது 19 மற்றொரு குற்றவாளிக்கு வயது 54 என்று செய்தி பரவியது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் எங்கு பார்த்தாலும் சிறுமிக்கு நீதி வேண்டும் என்ற குரல் முழக்கங்கள் ஒலித்துக் கொண்டே கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரியில் பொதுமக்கள் தானாக முன்வந்து போராடுகின்றனர்.
இளைஞர்கள் மாணவர்கள் இயக்கங்கள் என அங்கங்கே போராடி வருகின்றனர். அரசியல் கட்சிணர் முழு அடைப்பு போராட்டங்கள் என நடத்தி வந்தனர் குழந்தை கொலை செய்த கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வேண்டும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பவர்கள் மீது வாழ்நாள் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று அறவழியில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு புதுச்சேரி மாநில ஏசியன் போட்டோகிராபர் வீடியோகிராபர் நல சங்கத்தின் சார்பாக அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் போட்டோகிராபர் வீடியோகிராபர்கள் கலந்துகொண்டு சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அரசுக்கு தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்…