அமெரிக்காவில் பூனைக்கு கெளரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பர்லிங்டன் பகுதியில் உள்ள வெர்மோண்ட் பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகமே கதி என சுற்றிவந்த மேக்ஸ் என்ற அந்தப் பூனை, மாணவர்களுடன் நட்பாக பழகி வந்தது. இதனால் அறிஞர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் வழங்கப்படுவதைப் போல கெளரவ டாக்டர் பட்டம் அந்தப் பூனைக்கு வழங்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் விலங்குகளுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2020-இல் வர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவியதற்காக மூசே என்ற நாய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதற்கு முன் கடந்த 2016-இல் டெட்டி என்ற குதிரைக்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.