in

போராட்டம் நடத்து முயன்ற விவசாய சங்க தலைவருக்கு வீட்டுச் சிறை போலீசார் பாதுகாப்பு

போராட்டம் நடத்து முயன்ற விவசாய சங்க தலைவருக்கு வீட்டுச் சிறை போலீசார் பாதுகாப்பு

 

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் சின்னதுரை அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வீட்டிற்கு முன் இன்று காலை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் அதிகாலையில் அவர் வீட்டிலேயே அவரை அடைத்து வைத்து பாதுகாப்புக்கு நின்று வருகின்றனர்.

அப்போது பேசிய சின்னதுரை காவல்துறையினரை வைத்து தேர்தலின் போணு வாக்கு சேகரிக்க வருகிறார்கள். தற்பொழுது போராட்டம் நடத்தக்கூடாது என என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் ஓட்டு கேட்க வருவார்கள் அப்பொழுது எப்படி வருவார்கள் என நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது சோமரசன்பேட்டையில் பொதுமக்கள் அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் நடைபெறுவது மற்றும் விவசாய சங்க தலைவரும் சின்னதுரை போராட்டம் அறிவித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்கு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதகஜ ராஜா நிகழ்ச்சியில் வாய் குழறி பேச நடுங்கிய விஷால், ரசிகர்கள் கவலை