in

ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி மீளப் பெறுதல் ஆணைய ரத்து செய்து வீட்டு வரி சலுகை வழங்க வேண்டும்

2024 ஆம் ஆண்டு அரசாணை எண் 164 இன் படி ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி மீளப் பெறுதல் ஆணைய ரத்து செய்து வீட்டு வரி சலுகை வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பின் முதல் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பின் சார்பில் முதல் மாநில பொது குழு கூட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நெல்லை திருச்சி கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்

2021 ஆம் ஆண்டின் அரசு கடிதத்தின் படி சுமார் 7500 உறுப்பினர்களுடன் கொண்ட இந்த ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பிற்கு மாநில அங்கீகாரம் வழங்க வேண்டும்

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது இப்போது அந்த நிலை இல்லை மீண்டும் முன்னுரிமை வழங்க வேண்டும்

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழக போட்டி தேர்வில் மறு வாய்ப்பு மறுக்கப்படுகிறது மீண்டும் பழைய நிலையின் படி பலமுறை வாய்ப்புகள் வழங்க வேண்டும்

2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கடிதத்தின் படி மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மேற்படிப்புகளில் முன்னுரிமை பின்பற்ற வேண்டும்
பணியில் இருக்கும் போது இறக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில் 2023 அரசாணை GO 33 இல் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த அரசாணை ரத்து செய்து மீண்டும் பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டி விவசாயிகள்

திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு