சூரரைப் போற்று படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது அபர்ணா பாலமுரளி
சூரரைப் போற்று என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் தான் எப்படி கமிட்டானேன் என்பதை பற்றி கூறியுள்ளார்.
சினிமா ஆடிஷன் நடப்பதாக கேள்விப்பட்ட நான் சென்னை…இக்கு சென்றேன் அப்பொழுது என்னுடன் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்ததை பார்த்து பயந்துவிட்டேன் என் முறை வந்ததும் நான் உள்ளே சென்று ஆடிஷன் கொடுத்தேன் பிறகு தான் தெரிந்தது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க தேர்வு நடக்கிறது என்று நமக்கு நிச்சயம் இந்த வாய்ப்பு கிடைக்காது என்று நான் ஆடிஷன் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
ஒரு வாரம் கழித்து எனக்கு போன் வந்தது நீங்கள் இந்த படத்திற்கு தேர்வாகி விட்டீர்கள் என்று சூரரைப் போற்றுப்படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு நல்ல பெயரும் தேசிய விருதும் கிடைத்தது.
ஆரம்பத்தில் ஒல்லியாகி இருந்த நான் தற்பொழுது குண்டாகி விட்டேன் இதனை பார்த்து நிறைய பேர் உனக்கு அம்மா Character மட்டும் தான் சூட் ஆகும் என் முகத்துக்கு நேரே கூறினார்கள், சமூக வலைதளத்திலும் என்னை ட்ரோல் பண்ணி நக்கல் பண்ணார்கள் நிறைய நாள் அதற்காக வருத்தப்பட்டென்.
இப்பொழுது அதற்காக வருத்தப்படவில்லை என்னுடைய திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்றார் பாலமுரளி.