in

குத்தாலத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

 

குத்தாலத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

 

குத்தாலத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் 2000க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதுடன் குத்தாலம் மனிதநேயம் அறக்கட்டளை,மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம்,

பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மனிதம் அறக்கட்டளை தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து கொண்ட பார்வை கோளாறு உள்ளிட்டவைகளுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அன்றைய தினமே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு ஐ ஓ எல் லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, உணவு, தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)

இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் மாணவர்கள் சாதனை