பங்கு சந்தை வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.
நண்பருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட திருப்பதியை சேர்ந்த மூன்று பேர் கொண்ட குடும்பம்.
நண்பர் மற்றும் ஒரே குடும்பத்தை தந்தை, தாய், மகள் ஆகியோர் உட்பட நான்கு பேர் கைது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புத்தூர்,ரேணிகுண்டா, திருப்பதி, நகரி ஆகிய ஊர்களில் 100,500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் சமீப நாட்களாக அதிக அளவில் இருந்து வந்தது.
இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டிருந்த போது புத்தூரில் நான்கு பேர் பொருட்களை வாங்குவது போல் கடைகளில் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றுவது தெரிய வந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது நான்கு பேரில் மூன்று பேர் திருப்பதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் என்றும் அவர்கள் திருப்பதியை சேர்ந்த ரமேஷ்,அவருடைய மனைவி சந்தியா, மகள் இஷா என்பதும் உடன் இருந்த மற்றொரு நபர் அவர்களின் குடும்ப நண்பரான முனிகிருஷ்னா ராவ் என்று தெரிய வந்தது.
நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த புத்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்த முனி கிருஷ்ணாராவ், தம்முடைய நண்பரான திருப்பதியை சேர்ந்த ரமேஷ் வீட்டில் தங்கி அவருடன் சேர்ந்து பங்கு சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஆனால் பங்கு சந்தை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் நஷ்டத்தை ஈடு செய்ய கள்ள நோட்டுகளை அச்சிட முடிவு செய்து அவர்கள் youtube வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சிட பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருப்பதியில் தேவையான பொருட்களை வாங்கி அவர்கள் ரமேஷ் வீட்டில் 10,0 500 ஆகிய கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
ரமேஷ் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் புழக்கத்தில் விடுவதற்கு தயார் நிலையில் இருந்த 100,500 கள்ள நோட்டுகள், கள்ள நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்படும் எந்திரங்கள், பொருட்கள், ஒரு கார் ஆகிவற்றையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.