நூற்றுக்கணக்கான மீனவர்கள் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு திலகம் இட்டு மலர் தூவி மௌன அஞ்சலி
தேமுதிக முன்னாள் தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை: கடலுக்கு செல்லாமல் கல்லார் மீனவ கிராமத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு திலகம் இட்டு மலர் தூவி மௌன அஞ்சலி.
தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,தேமுதிக தலைவரும்,பிரபல திரைப்பட நடிகர் மாணவன் கேப்டன் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு நினைவேந்தல் செய்து வருகின்றனர்.
அதன்படி நாகை மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை அனுசரித்து வருகின்றனர்.
கல்லார் மீனவர் கிராமத்தில் அவரது திரு படத்திற்கு மாலை அணிவித்து ஒவ்வொருவரும் பொட்டு வைத்து மலர் தூவி தீபாரதனை காண்பித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வழியில் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கினர்.