in

நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே பேருந்தில் ஏறி படிக்கட்டில் ஆபத்தான பயணம்

திருச்சியில் பள்ளி அருகே அரசு பேருந்துகள் நிற்காததால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே பேருந்தில் ஏறி படிக்கட்டில் ஆபத்தான பயணம் – அதிர்ச்சி

திருச்சி மாநகரில் முக்கியமான சாலைகளில் பிரபலமான பள்ளியில் இயங்கி வருகிறது.ஆர்.சி பள்ளி சிக்னல் முன்னதாக ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு காத்திருப்பார்கள்.

மாலை நேரங்களில் பள்ளி முடிந்து சாலைக்கு வந்து நிற்கும் மாணவர்களுக்கு அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கிறது.பேருந்து நிலையத்துக்கு மாணவர்கள் செல்ல பள்ளி முன்பாக கடந்து செல்லும் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதும் நிற்கும் சில பேருந்துகளில் மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி ஏறுவதும் காட்சிகளில் காண முடிகிறது.

சிலர் கீழே விழுந்து காயம் அடைவதும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுவதும் உள்ளிட்டவைகளும் நடக்கிறது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து பேருந்துகள் நிற்காமல் சென்றால் அப்போது ஒரு பேருந்து வந்து நிற்கும் போது அனைத்து மாணவர்களும் அப்பேருந்தில் ஏறி படிக்கட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். உடனடியாக திருச்சி மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அப்பகுதியில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்ல உத்தரவிட வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது

திருச்சியிலிருந்து சென்ற ஏர் ஏசியா விமானத்தில் 4 பேர் சீட்டாடி தொந்தரவு