in

அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் வன்முறை

அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் வன்முறை

 

பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்து, வீடு மீது கற்களை வீசி தாக்குதல். பரபரப்பு.

புஷ்பா 2 திரைப்படம் திரைக்கு வந்த நாள் அன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அந்த படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் மரணம் அடைந்த நிலையில் அவருடைய 7 வயது மகன் படுகாயம் அடைந்து மூளை செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அன்று நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தெலுங்கானா சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி விரிவாக எடுத்துரைத்தார்.

அப்போது அன்றைய தினம் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டும் வகையில் முதல்வர் பேசி இருந்தார்.

முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களுடன் பேசிய அல்லு அர்ஜுன் என்னுடைய புகழ், நற்பெயர் ஆகிய இவற்றை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர் திடீரென்று அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது அவர்கள் ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் அங்கு திடீரென்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கங்களை சேர்ந்த போராட்டக்காரர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

What do you think?

கனமழை காரணமாக தனியார் வாகன காப்பகத்தின் சுவர் இடிந்து 10 கார்கள் 2 ஆட்டோக்கள் சேதமானது

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சரமாரி தாக்குதல்