in

நான் ஒரு குடிகாரன் மிஷ்கின் …. மிஷ்கின் Open Talk …ஏற்படுத்திய அதிர்வளை…மன்னிப்பு கேட்க வேண்டும்


Watch – YouTube Click

நான் ஒரு குடிகாரன் மிஷ்கின் …. மிஷ்கின் Open Talk …ஏற்படுத்திய அதிர்வளை…மன்னிப்பு கேட்க வேண்டும்

பிரபல இயக்குனர் மிஷ்கின் திறமையான இயக்குனர், இவர் படைப்பில் வெளியான படங்கள் வெற்றி பெறாமல் போகாது. தற்போது டைரக்ஷனில் இருந்து நடிப்புக்கு மாறியிருக்கிறார். இவர் மேடை ஏறினால் ஏதாவது வில்லங்கமாக பேசி பிரச்சினையை உருவாக்கிவிடுவார். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போ பதிக்குனு எரியுது. பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள “பாட்டில் ராதா” என்ற படத்தின் டிரைலர் வெளியிட்டின் போது மிஷ்கின் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேடையில் நான் ஒரு குடிகாரன் மற்றவர்களை விட நான் அதிகமாக குடிப்பேன் குடிப்பழக்கமே இல்லாத சமூகமே இல்லை உலகத்தில் எங்கு சென்றாலும் எல்லோரும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் பல வருடங்களுக்கு முன்புவந்த பழைய மதுவைப் விலைமதிப்பற்றதாக பார்கிறார்கள்.

மதுவை பற்றிய முழு விவரமும் எனக்கு தெரியும் என்று இவர் பேசிய விதமும் நாகரிகம் இல்லாமல் அவர் உபயோகித்த வார்த்தைகளும் தற்போது இணையத்தில் வைரலாகி மிஷினுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி கண்டனமும் வலுக்க ஆரம்பிக்கிறது.

இதனை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன் மேடையில் மிஷ்க்கின்’ பேசும் பொழுது அநாகரிமாக பேசக்கூடாது மற்றவர்களை காயப்படுத்தி பேசக்கூடாது மேலும் வாடா போடா என்று ஒருமையிலும் அழைக்க கூடாது இயக்குனர் மிஷ்கின் என்னுடைய சிறந்த நண்பர் நான் பலமுறை அவரிடம் இப்படி எல்லாம் பேசாதீர்கள் கெட்ட வார்த்தை Use பண்ணாதிங்க என்று சொல்லி இருக்கின்றேன்.

மேடையில் நாகரிகமாக பேச தெரியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்பதற்காகவும் சகட்டுமேனிக்கு வாயில் வந்ததை எல்லாம் கூறி விடக்கூடாது மிஷ்க்கின் பேசியதற்கு நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி..ஜாலி ஹோம்ஸ் நிறுவனம் புருனே இயக்கிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது

பேரழகி சீரியலில் நடித்த நடிகை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி