in

பாகுபாடுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது ஸ்ருஷ்டி டாங்கே


Watch – YouTube Click

பாகுபாடுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது ஸ்ருஷ்டி டாங்கே

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடிகர் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

பல நடிகர் நடிகைகள் பங்கேற்று நடனம் ஆடும் நிலையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, பாகுபாடு காரணமாக பிரபுதேவாவின் வரவிருக்கும் இசை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாவது பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்தாலும், ‘எனக்கு தகுதியானவற்றுக்காக இன்னும் போராட வேண்டியிருக்கு.

“பிரபுதேவா இசை நிகழ்ச்சியில் என்னைப் பார்ப்பேன் என்று எதிர்பார்த்த எனது அனைத்து ரசிகர்களுக்கும்’, நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா வுக்கு எதிரானது அல்ல நான் அவரது மிகப்பெரிய ரசிகை, எப்போதும் அப்படியே இருப்பேன். இருப்பினும், பாகுபாடுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது,” எதிர்காலத்தில் இந்த துறையில் உள்ள கலைஞர்கசக்கு மரியாதை அளிக்கப்படும் என்று நம்புகிறேன் . என்று குறிப்பிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

விஜய் டிவி பெயரில் நடக்கும் மோசடி

குதிரையில் அமர்ந்தபடி படம் பார்க்க வந்த ரசிகர்