in

தலைவர் பேசாமல் நான் கருத்து வெளியிட முடியாது….நடிகர் மம்முட்டி


Watch – YouTube Click

தலைவர் பேசாமல் நான் கருத்து வெளியிட முடியாது….நடிகர் மம்முட்டி

ஹேமா கமிட்டி வெளியான போது முன்னனி நடிகர்கள் பலரும் மௌனம் காத்த நிலையில் மலையாள திரையுலகத்தின் நடிகர் சங்கமும் முழுமையாக கலைக்கப்பட்டது.

அதன் தலைவரான நடிகர் மோகன்லால் ராஜனாமா செய்தபோதும், விளக்கம் தராதவர் தற்பொழுது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் ஓடி ஒலிய மாட்டேன் அதே சமயம் மலையாள திரை உலகை யாரும் பூன்டோடு அழிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.

மம்முட்டியும் ஹேமா கமிட்டி பற்றி தனது சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். இது போன்ற பிரச்சனைகளை பற்றி நடிகர் சங்கமே முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் அதன் பிறகு தான் உறுப்பினரான நான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதனால் தான் நான் மௌனமாக இருந்தேன். சினிமா உலகில் நல்லது கெட்டது என்று இரண்டும் உண்டு. ஹேமா கமிட்டியில் குறிப்பிட்டது போல் தீர்ப்புகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். போலீசாரும் நேர்மையாக விசாரிக்கட்டும், தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கட்டும்.

மேலும் ஹேமா கமிட்டியை நடைமுறைப்படுத்த சட்ட தடைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை களைய முறையான சட்டம் கொண்டு வர வேண்டும். சினிமாவில் அதிகார வர்க்கம் என்று எதுவும் இல்லை. மலையாள சினிமா எப்பொழுதும் உயிருடன் வேண்டும் அதுதான் எனது ஆசை என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

வழக்கில் சிக்கிய நடிகர் சித்திக்கை கட்டிபிடித்து அழுது ஆறுதல் சொன்ன நடிகை பீனா ஆண்டனி …..

ரஜினிக்காக கங்குவா ரிலீஸ்…சை தள்ளி வைத்த சூர்யா