அமரன் படத்திற்காக ஒரு வாரம் சாப்பிடாமல் ….சோர்ந்து போய்ட்டேன்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் உணர்வு ரீதியாக எல்லோரையும் உறைய வைத்திருக்கிறது.
அந்த அளவிற்கு மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அருமையாக வடிவமைத்திருகிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு நிஜ மேஜர் முகுந்த்தனும் ரெபேக்கா வர்க்கிசும் இப்படித்தான் இருப்பார்கள் என்று கண் முன்னே நிறுத்தி நம் மனதில் ஆழமாக பதித்து விட்டார்கள்.
எல்லா நடிகர்களும் அமரன் படத்தையும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவியை புகழ்ந்து தள்ளும் நிலையில் அந்த படத்தில் வஹித்தாக நடித்த நடிகர் உமைர் சிவகார்த்திகேயன் புகழ்ந்து தள்ளிவிட்டார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி தவிர நிறைய நிறைய புது நடிகர்கள் நடித்துள்ளனர். சிறு கேரக்டராக இருந்தாலும் உமைர் நடிப்பு பெரிய அளவில் அமரன் படத்தில் பேசப்பட்டிகிறது, செம்மையாக வில்லத்தனம் காட்டி நடித்திருப்பார்.
காஷ்மீரை சேர்ந்த மாடல்..லான இவரை ராஜ்குமார் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் வஹித்தை காப்பாற்றி தூக்கிக் கொண்டு ஓடிவரும் காட்சியில் ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு தோளில் வஹித்தை ..யும் தூக்கி கொண்டு ஓடி வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பு பற்றி சிலிர்ப்புடன் உமைர் கூறினார்.
நிஜ ராணுவ வீரராகவே சிவகார்த்திகேயன் சார் அந்த படத்தில் மாறிவிட்டார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். என்னையும் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்த இயக்குனர் பெரியசாமிக்கும் எனது பாராட்டுக்கள் ஒரு மாடலான எனக்கு அந்த கேரக்டர் செட்டாகாது என்று நினைத்தேன்.
ஆனால் ராஜ்குமார் சார் தான் இந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும்..இன்னு வற்புறுத்தி நடிக்கவெச்சாரு 80 கிலோவிலிருந்து 71 கிலோவிற்கு தன்னுடைய உடலை குறைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அசால்டாக தன்னை தூக்கி ஓடிவந்ததாகவும், ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து வெயிட்…டை குறைத்தேன் நான் சாப்பிடாமல் இருந்ததால்தான் அந்த காட்சியில் என் முகத்தில் சோர்வையும் என் உடலில் தளர்வையும் காணமுடிந்தது என்றார்.
சிவகார்த்திகேயன் சாய் பல்லவி மட்டுமல்ல மற்றவர்களும் இந்த படத்திற்காக தன்னை வருத்தி நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது நெகிழ்ச்சியாக இருக்கிறது.