அவதூறுகளை பற்றி எனக்கு கவலை இல்லை…ஜெயம்ரவி
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த நாளிலிருந்து இவர்களைப் பற்றிய சர்ச்சைக்கு End Card….இல்லாம ஓடிகொண்டிருகிறது.
ஆர்த்தி தொடர்ந்து தனக்கு இந்த விவாகரத்தில் உடன்பாடு இல்லை என்று கூற ஜெயம் ரவி விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்க விவாகரத்துக்கு பற்றி ரவி மீண்டும் ஒரு கருத்தை வெளியிட்டிருகிறார்.
மற்றவர்களை பற்றி அவதூறாக வெளிவரும் விஷயங்களை நான் குறை சொல்ல மாட்டேன் நான் வெளியே டீ கொடுத்தாலும் அதை ரசிகர்கள் வைரல் ஆகிவிட காரணம் நான் ஒரு சினிமா பிரபலம்.
பொதுமக்கள் எப்பொழுதுமே சினிமா பிரபலங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுபவர்களை நாம் தடுக்க முடியாது.
பக்குவம். முதிர்ச்சி இல்லாதவர்கள் மட்டுமே தவறான கருத்துக்களை வெளியிடுவார்கள். ஒரு சிலரோ என் வாழ்க்கை பற்றி பல கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு அதன் தீவிரம் புரியவில்லை எல்லோரும் இதை ஒரு செய்தியாக மட்டும் தான் பார்க்கிறார்கள்.
ஆனால் இது என் வாழ்க்கை என்று புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை அதனால் விமர்சனங்களையும் அவதூறுகளையும் கண்டு வருந்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஜெயம் ரவி பட்டுன்னு கூறி சட்டுன்னு முடிசிட்டாறு.