தமிழ் படங்களில் நடிக்க பிடிக்காது
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சிறுவயதிலேயே வாய்ப்பு தேடி சினிமா துறைக்கு வந்தவர், காதலே நிம்மதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இன்றுவரை இவர் கதாபாத்திரத்தை நின்று பேச வைத்த படம் பிதாமகன்.
இவர் தற்பொழுது அளித்துள்ள பேட்டியில், தமிழை தாண்டி பலமொழிகளில் நடித்தாலும் தெலுங்கு படங்களில் நடிக்க தான் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதற்கு காரணம் தெலுங்கில் தனது கிடைக்கும் மரியாதை தான் என்கிறார். அங்கு கிடைக்கும் மரியாதை தமிழ் துறையில் தனக்கு கிடைக்கவில்லை என்கிறார்.
தமிழ் சினிமா துறையில் மட்டும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பாங்கு ஏன் இருக்கிறது என்று தெரியவில்லை. தெலுங்கில் மரியாதை மட்டுமல்ல நல்ல சம்பளமும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகளும் தருகிறார்கள் தமிழ் படங்களில் வாய்ப்பு தருகிறேன் என்று அழைத்தாலும் தரக்குறைவா தான் பேசுவார்கள்.
தானாக வந்து சான்ஸ் கொடுத்தாலும் நான் என்னவோ கஷ்டப்பட்டு அவர்களிடம் சான்ஸ் கேட்டது போலவும் அவர்கள் எனக்கு வாழ்க்கை கொடுப்பது போன்று உங்களுக்கு இவ்வளவு சம்பளம் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம், வந்து நடித்துவிட்டு போங்கள் என்பார்கள்.
அந்த மாதிரி மரியாதை இல்லாமல் பேசுவது எனக்கு பிடிக்காது அதனால் தான் நான் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன் என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.