N. T. R….க்கு துரோகம் செய்துவிட்டேன்.. ஜெயப்ரதா
தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜெயப்பிரதா ஹிந்தி பக்கம் சென்றவர் அங்கேயும் டாப் ஸ்டார்…ராக கொடிகட்டி பறந்தவர். ஜெயப்பிரதா தமிழ், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட எட்டு மொழிகளில் 300 படங்களில் நடித்தவர்.
1986, ரில் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாட்டாவை மணந்தார், அவர் ஏற்கனவே சந்திரா என்ற பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றவர். நஹாதா தனது மனைவியை விவாகரத்து செய்யாமல் ஜெயப்பிரதாவை மணந்ததால் இந்த திருமணம் பல சர்ச்சைகளை கிளப்பியது, ஜெயா மற்றும் ஸ்ரீகாந்த் உறவு நன்றாக இல்லை என்றும், சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயா இறுதியில் தனது சகோதரியின் மகனான சித்துவை தத்தெடுத்தார்.
ஜெயப்பிரதா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தெலுங்கு நடிகரும் முதல் மந்திரியும் ஆன என். டி. ராமராவ் ..இக்கு துரோகம் செய்ததாக வெளியிட்ட பதிவு ஒன்ரு தற்போது viral…ஆகி வருகிறது. . டி. ராமராவ் உடன் அதிக படங்களின் நடித்துள்ளார் ஜெயா .அவர் பல நடிகைகளுடன் நடித்த போதும் தெலுங்கு தேசம் என்ற கட்சியை 1994..இல் தொடங்கிய போது என்னை மட்டுமே அரசியலுக்கு வரும்படி அழைத்தார் நானும் அவரது கட்சியுடன் இணைந்தேன் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது தயாரிப்பாளர்கள் பலர் என்னை எச்சரித்தனர் அரசியலுக்கு போனால் சினிமா வாழ்க்கை பாழாகிவிடும் என்று அதைப் பற்றி எல்லாம் நான் யோசிக்காமல் கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தேன் அந்த கட்சியும் மாபெரும் வெற்றி பெற்றது அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறி சந்திரபாபு நாயுடு கைக்கு ஆட்சி சென்று விட்டது அப்போது நானும் சந்திரபாபு நாயுடு பக்கம் சென்று விட்டேன் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு அந்த நேரம் என்டி ராமராவ் பக்கம் நான் இருந்திருக்க வேண்டும் என்னை நம்பி நிறைய பொறுப்புகள் தந்த அவருக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என்பதை நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று எத்தனை வருடம் கழித்து ஜெயபிரதா கூறியுள்ளார்.