in

என்னை கேலி செய்தவர்களை பார்த்தால் சிரிப்பு வரும்


Watch – YouTube Click

என்னை கேலி செய்தவர்களை பார்த்தால் சிரிப்பு வரும்

 

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக பெற்றார் நடிகை நித்யா மேனன்.

நடிகை நித்யா மேனன் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்ற நடிகைகளை போல எல்லா படத்திலும் கமிட் ஆகாமல் தனக்கு பெயர் சொல்லும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பவர்.

நடிகை நித்யா மேனன் விருது பெற்றவுடன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது இந்த விருது எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி நான் நடிகையாக வேண்டும் என்று நினைக்கவில்லை பத்திரிகையாளராக வேண்டுமென்று ஆசைப்பட்டேன் ஆனால் இயக்குனர் நந்தினி ரெட்டி அவரது படத்தில் நடிக்க என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

நித்தியா மேனன் 8 வயதில், “ஹனுமான்” என்கின்ற ஆங்கில திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்,. ஆனால் நான் நினைத்தது போல் சினிமா வாழ்க்கை அவ்வளவு ஈசியாக இல்லை என்னை எப்பொழுதுமே திமிர் பிடித்த நடிகை என்று கூறுவார்கள்.

மேலும் நான் குண்டாகவும் குள்ளமாகவும் இருப்பதால் என் உருவத்தை வைத்து எல்லோரும் கேலி செய்வார்கள் என்னை விமர்சனம் செய்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிக்க தோன்றும் ஆனால் அந்த விமர்சனத்தை பற்றி கவலைப்பட்டு என்னை நான் ஸ்ட்ரெஸ் ஆக்கிக் கொண்டதில்லை வாழ்க்கையில் சாதிக்க நிறைய இருக்கிறது.

நான் நடிக்கும் அனைத்து மொழி படங்களின் மொழிகளையும் நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இதுவரை ஐந்து மொழிகளை நான் கற்றுக் கொண்டேன் நாம் எந்த துறையில் வேலை செய்தாலும் முழு மனதுடனும் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வேலை செய்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று கூறினார் நித்தியா மேனன்.


Watch – YouTube Click

What do you think?

திடீரென்று பிரேமலதாவை சந்தித்த நடிகர் விஜய்

தளபதி 69 நூறு சதவீதம் கமர்ஷியல் …. வினோத் அறிவிப்பு