எந்திரன் படத்தை மிஸ் பண்ணிட்டேன்..கமல் வருத்தம்
ஷங்கரின் பிரம்பாண்ட படைப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன் இந்த படம் 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா rai நடிப்பில் வெளியானது . இந்தப் படத்தில் முதலில் கமலஹாசனை நடிக்க வைக்க ஆசை பட்டாராம் சங்கர். கமலஹாசனும் அதற்கு சம்மதித்து , சங்கரும் கமலும் இணைந்து அந்த படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தனர்.ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளப் பிரச்சனை காரணமாக கமல் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகினார். அந்த படத்தை கைவிட கூடாது என்று பிறகு ஷங்கர் பல பேரை அணுகி இறுதியாக அவரின் முயற்சியால் அந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது .மிஸ் பண்ணிட்டோமே…இன்னு தான் வருத்த பட்டதாக கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.