வலியை..இப்போ நினைச்சாலும் நடுங்குகிறது
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா தற்பொழுது சகஜமாக வெளி உலகில் தலை காட்டி வருகிறார்.
அவர் அடிக்கடி தன் நோய் குறித்து சில பதிவுகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவார். தற்பொழுது அவர் அளித்துள்ள பேட்டியில் நான் புற்றுநோய் பாதிப்பில் இருந்த நாட்களை நினைக்கும்போது எப்பொழுதும் என் உடல் நடுங்குகிறது.
அப்பொழுது தாங்க முடியாத வலியையும் வேதனையும் அனுபவித்தேன் ஒவ்வொரு நாளும் இதுதான் எனது கடைசி நாள் என்று நினைத்தேன் எந்தவித அறிகுறியும் இல்லாமல் புற்றுநோய்யின் கடைசி நிலையில் இருக்கும் பொழுது தான் எனக்கு தெரிந்தது.
எல்லோரையும் போல் நானும் மரிக்க நேரிடுமோ என்று முதலில் பயந்தேன். நியூயார்க்…கில் இருக்கும் சிறந்த மருத்துவர்கள் தான் எனக்கு சிகிச்சை அளித்தார்கள்.
6 மாதங்கள் நியூயார்க்கில் இருந்து சிகிச்சை பெற்றேன். 11 மணி நேரம் தொடர்ந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தேன் என் அம்மா எப்பொழுதுமே உனக்கு எதுவும் ஆகாது தைரியமாக இரு என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவரின் தைரியத்தால் தான் இந்த வியாதியில் இருந்து நான் வெளியே வந்தேன் இந்த வாழ்க்கை எனக்கு கடவுள் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு என்று மகிழ்ச்சியுடனும் வேதனையுடனும் பதிவிட்டுள்ளார்.