in

அரசியல் பாம்பை பிடித்து ஆட அரம்பிச்சிடேன்..


Watch – YouTube Click

அரசியல் பாம்பை பிடித்து ஆட அரம்பிச்சிடேன்..

 

விஜய் விக்ரவாண்டியில் நடக்கும் மாநாட்டில் பங்கு பெருவதற்காக. நேற்று முன்தினம் மாலையை சென்னையிலிருந்து புறப்பட்டவர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எவ்வாறு நடக்கிறது என்பதை பார்வையிட்டவர், இரவில் தனது கேரவன்…னில்லேயே தங்கியவர் சரியாக 3.15… அரங்கத்தினுள் நுழைந்தார்.

ஆரம்மே துப்பாக்கியில் இருந்து புறப்படும் குண்டு போல தனது பேச்சால் மக்களை தெறிக்க விட்டார். தேர்தல் அரசியலில் ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் என அத்தனை பேரின் பாடங்களையும் படித்து பல பேரின் உந்துதலாலும், ஊக்கத்தாலும் எனது உயர்வை உதறிவிட்டு, ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய் ஆக உங்களை நம்பி மட்டுமே நான் இப்பொழுது வந்திருக்கிறேன், இந்த தமிழக வெற்றிக்கழகம் திசையாகவும் விசையாகவும் மாறி அரசியல் அழுகுகளை அடித்து துவைத்து நீக்க வேண்டும் உங்கள் வாக்கு தமிழ்நாட்டின் வெற்றிக்காக புதியதோர் வழியை உருவாக்கட்டும்.

புதுமையை செய்வோம் நீங்கள் தான் எல்லாமே அதை எப்போதுமே மனதில் வைத்து தான் நாங்கள் வேலை செய்வோம் மாநாடு முடிந்ததும் பாதுகாப்பாக செல்லுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

தனது அரசியல் செயல் திட்டங்களில் முக்கிய அம்சங்கள் பெண்கள், குழந்தைகள் முதியோரின் பாதுகாப்புக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்று உறுதி மொழியை வழங்குகிறேன். ஏற்ற தாழ்வில்லா இலவச கல்வி, மருத்துவ வசதி நல்ல குடிநீர், எல்லாமே சமமாக கிடைக்கும்.

மேலும் எங்களுடன் இணைந்து செயல்பட நினைக்கும் கட்சிகளுக்கு அரசியலிலும் அதிகாரத்திலும் சம பங்கு வழங்கப்படும் என்ற உறுதி மொழியும் கூறினார். ஒரு குழந்தை முதன் முதலில் அம்மா என்று கூறினால் பெற்றவளுக்கு சிரிப்பாக இருக்கும் ஆனால் அந்த குழந்தையிடம் கேட்டால் அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லத் தெரியாது சிரிக்க மட்டும் தான் செய்யும். அப்படி ஒரு நிலைப்பாட்டில் தான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.  அந்த குழந்தை முன்னால் ஒரு பாம்பு படம் எடுத்தால் அதை பார்த்து அந்த குழந்தை என்ன செய்யும் அந்த பாம்பு தான் அரசியல் அதை கையில் பிடித்து விளையாட நான் ஆரம்பித்து விட்டேன் அரசியலுக்கு நான் குழந்தை தான் தைரியமாக பாலிடிக்ஸ் என்ற பாம்பை வைத்து ஆடலாம்.

தன்னம்பிக்கையுடன் என் பின்னால் வாருங்கள் என்று சூளுரைத்தார். சம்பாதித்து மட்டுமே இருக்க கூடாது மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று மறை முகமாக ரஜினியையும் தாக்கினார்.

இந்த மாநாட்டிற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார். மாநாடு நிறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு குறை மட்டும் இருந்தது. முதல் மாநாட்டிற்கு இவரது குடும்பத்தினர் ஆதரவு கொடுக்கவில்லை குடும்பத்திலிருந்து இவரது அப்பா அம்மாவை தவிர யாரும் இந்த மாநாட்டிற்கு வரவில்லை என்பது மக்களிடையே சலசலப்பைஏற்படுத்தி இருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

என்னை வாழ வைத்த மக்களை நான் வாழ வைக்க வேண்டாமா….ஓங்கிய குரல்… அதிர்ந்த மேடை… அரண்ட அரசியல் தலைவர்கள்

இரண்டு மாசமாவது இருப்பேன்.. இன்னு நினைச்சேன்… அழுது புலம்பிய தர்ஷா குப்தா