மண்டபங்களில் எச்சி இலை எடுத்தேன்…விஜய் டிவி புகழ் Real Story
விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நுழைந்து தற்பொழுது வெள்ளி திரையிலும் கலக்கி கொண்டிருக்கும் புகழ்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திரைத்துறையில் வாய்ப்பு தேடி இரண்டு செட் துணியுடன் சென்னை வந்தவர் பல நாட்கள் இருக்க இடம் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் தூங்கி இருக்கிறார்.
வடிவேல் பாலாஜியை சந்தித்த பிறகு கலக்க போவது யாரு.. நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடிக்கவாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஷூட்டிங் …இல்லாத மற்ற நாட்களில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டவர் பல மண்டபங்களில் இலையை எடுத்து போட்டு ஒரு நாளைக்கு 30 அல்லது 50 ரூபாய் சம்பாதித்து அன்றைய தினத்தை ஒட்டுவாராம், பல மண்டபங்களில் எச்ச இலை எடுத்த என்னை இன்று பெரிய பெரிய மண்டபங்களை ஓபன் செய்ய அழைக்கிறார்கள் என்று புகழ் கண்ணீருடன் ஒருமுறை கூறினார்.
இவரின் நிலைமையை பார்த்து பல உதவிகள் செய்திருக்கிறார் வடிவேலு பாலாஜி. ஒவ்வொரு பேட்டியிலும் அந்த நன்றியை மறக்காமல் அவரின் பெயரை குறிப்பிடுவது மட்டுமல்லாமல் தன் வீட்டில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்குபவர் புகழ்.
இவரின் ஸ்டாண்ட் அப் காமெடி தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கொடுத்தது. Mr. ஜூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர் அண்மையில் ஒடிடியில் வெளியான கோலிசோடா ரைசிங் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.
தற்பொழுது Vijay Tv இன் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் மாறி இருக்கிறார்.. வெளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பத்து முதல் 15 லட்சம் வரை சம்பளமாக பெறும் இவர், திரைப்படங்களில் 50 முதல் 75 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பாதித்தவர் தற்பொழுது 4 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். பென்சி ரியாவை காதலித்து திருமணம் செய்த இவருக்கு ரிதன்யா..என்ற மகள் இருக்கிறார்.