குடும்ப பாரம்பரியத்தை தொடர எனக்கு பேரன் வேண்டும்… சிரஞ்சீவி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
தெலுகு மெகாஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் பிரம்ம ஆனந்தம் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் தனது குடும்பத்தினர் குறித்து கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிரஞ்சீவி, தனது வீடு பேத்திகளால் சூழப்பட்டிருப்பதால், பெண்கள் விடுதி போல் இருப்பதாகவும். குடும்பத்தில் பையன்கள் இல்லாததால் தான் ஹாஸ்டல் வார்டன் போல் உணர்கிறேன் என்று நகைச்சுவையாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சிரஞ்சீவி, தனது மகன் ராம் சரணிடம், “எங்கள் பாரம்பரியம் தொடர வேண்டும் என்பதற்காக அடுத்த முறை ஆண் குழந்தை பிறக்கும்படி சரணிடம் கேட்டேன்” என்றார்.. ”
ஆனால் என் மகன் மகளை மிகவும் நேசிக்கிறான், அவனுக்கு வேறு ஒரு பெண் பிறந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்.” என் குடும்பத்தின் பாரம்பரியம் தொடர வேணம்மானால் எனக்கு பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்து நகைச்சுவையாக இருந்தது, ஆனால் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. அரசியல்வாதிகள் சிலரும் சிரஞ்சீவிக்கு எதிராக கண்டம் தெரிவித்து வருகின்றனர், ஆண் பெண் இருவருமே குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவர்கள் தான் பெண் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதா என்று சிரஞ்சீவி…இக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.