நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டி
அரசியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் விமர்சனம்
தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் அதிக அளவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு
தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாட்டு மைய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் தொழில் திறன் மேம்பாடு குறித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் தான் ஆனால் இதை முழு பட்ஜெட் என நினைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பெண்களுக்கு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் ஆக இருந்தாலும் ஒரு முழுமையான பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய பட்ஜெட் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும்போது விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் எத்தனை தடவை வெளிநாட்டுக்கு போய் வருவது என்று கேள்வி எழுப்பிய அவர்
தமிழகத்தில் நடந்து வரும் சில சம்பவங்களால் ஆளும் கட்சியினர் அச்சத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்ட தமிழிசை
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே நான் வரவேற்கிறேன் இன்னும் அதிக அளவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நிற்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து தமிழிசை…
முடிவு செய்துவிட்டு கூறுகிறேன் என்று பதில் அளித்தார் திமுக வெற்றி பெற்றால் வாக்கு மிஷின் சரியாக வேலை செய்கிறது தோல்வியடைந்தால் வாக்கு மிஷின் வேலை செய்யாதா அப்படி என்றால் திமுகவினர் வெற்றி பெற்றது உண்மை இல்லையா என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை அனைத்து தலைவர்களும் வருகிறார்கள் ஜனநாயகம் பெருகி வருகிறது என்பதைத்தான் பிரதமர் மோடி தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தமிழிசை தெரிவித்தார்.