in

தமிழ் நாட்டுல தமிழ் தான் பேசுவேன் …. அதிரவைத்த அல்லு அர்ஜுன். Pushpa 2 THE RULE Promotion


Watch – YouTube Click

தமிழ் நாட்டுல தமிழ் தான் பேசுவேன் …. அதிரவைத்த அல்லு அர்ஜுன். Pushpa 2 THE RULE Promotion

 

புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூல் ரிலீஸுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன், ராஸ்மிகாமந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனின், ஃபேன் இந்தியா (Pan India) மூவியான புஷ்பா ஆயிரம் கோடி வசுலித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அல்லு..வுக்கு பெற்று தந்தது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுகுமாரே இயக்கியிருக்கிறார், பல பிரச்சினைகள் காரணமாக புஷ்பா 2 வெளிவர தாமதம் ஆனது, மேலும் இயக்குனருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் நடந்த பிரச்சனையாலும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்த்த படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

விமர்சனம் ரீதியாக புஷ்பா பல சர்ச்சைகள் ஏற்படுத்தினாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் சூடு பிடிக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர்.

அப்பொழுது கிஸ்ஸிக் என்ற LYRICAL வீடியோ வெளியிடப்பட்டபோது ஸ்ரீலிலா நடனம் ஆடினார். ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன் நான் ஒரு பக்கா சென்னை பையன் நேஷனல், இன்டர்நேஷனல் என்று எங்கு சென்றாலும் சென்னை தான் என்னுடைய பேவரிட் பிளேஸ் க நான் 20 வருடங்களாக இங்கே இருந்தேன்.

அதனால் எனக்கு இந்த ஊர் எப்பொழுதுமே ஸ்பெஷல் தான். என் நண்பர்களோடு சேர்ந்து நான் லோக்கல் பாஷை எல்லாம் பேசுவேன் என்றார், உடனே அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்று கத்திய பொழுது அல்லு நான் தமிழில் தான் பேசுவேன் இது நான் இந்த மண்ணுக்கு கொடுக்கும் மரியாதை என்றார்.

குஜாலமான தமிழ் ரசிகர்கள் அலுவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளுகின்றனர். மேடைக்கு வந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், “வெளியீட்டிற்குப் பிறகு புஷ்பாவைக் கொண்டாடினீர்கள், வெளியீட்டிற்கு முன்பே புஷ்பா 2… வை கொண்டாடுகிறீர்கள்.. அல்லு அர்ஜுன் எனது சிறுவயது நண்பர், நாங்கள் ஒன்றாக தேசிய விருதுகளை பெற்றோம். புஷ்பா 2..வில் அல்லு ..வின் விஸ்வரூபத்தை மக்கள் காண்பார்கள் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் தனபால் மறைவு

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை அக்ஷிதா போபையா..வின் திருமணம்