in

இரண்டு மாசமாவது இருப்பேன்.. இன்னு நினைச்சேன்… அழுது புலம்பிய தர்ஷா குப்தா


Watch – YouTube Click

இரண்டு மாசமாவது இருப்பேன்.. இன்னு நினைச்சேன்… அழுது புலம்பிய தர்ஷா குப்தா

 

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து தர்ஷா குப்தா இந்த வாரம் நான்காவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.

அவரது வெளியேற்றம் பார்வையாளர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஒரு சிலர் எதிர்பார்த்தது தான். ஆண்கள் அணியினர் கொடுக்கப்பட்ட எல்லா டாஸ்க்..கிலும் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் பெண்களுக்கு Nomination Free கொடுக்கப்பட்டது.

யாருக்கு நாமினேஷன் Free கொடுக்க வேண்டும் என்ற நீங்களே எடுங்கள் என்று விஜய் சேதுபதி கூறிவிட்டார். நாமினேஷன் ஃப்ரீ எனக்கு கொடுங்கள் என்று தர்ஷா கேட்ட போதிலும் ஓட்டிங்கில் பின் தங்கியதால் தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்டார்.

நாமினேஷன் லிஸ்டில் அருண், சத்யா, தர்ஷா, ஜாக்லின், பவித்ரா, முத்துக்குமரன் சௌந்தர்யா, என்று பல பேர் இடம் பிடித்தாலும், ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் வெறும் கன்டென்ட் காகவே ஏனோ தானோ என்று விளையாடியவர் தர்ஷா.

நிகழ்ச்சியிலிருந்து தர்ஷா வெளியேற்றப்பட்ட பிறகு BB கோப்பையை அடித்து நொறுக்கி, சக போட்டியாளர்களிடம் விடைபெற்று வெளியேறினார். விஜய் சேதுபதியுடன் மேடையில் இணைந்தபோது, அவர் ஹவுஸ்மேட்களைப் பற்றி சில தைரியமான அறிக்கைகளை வெளியிட்டார் மற்றும் பார்வையாளர்களுக்கு முன்னால் தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

தர்ஷா வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு தாங்கள் மகிழ்ச்சியடைந்ததாக நெட்டிசன்கள் கூறினார்கள். #தர்ஷா – உங்கள் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணம் நீங்கள் எவ்வளவு ஊமையாக இருக்கிறீர்கள்! உங்களிடம் நேர்மையோ விசுவாசமோ இல்லை – உங்களுக்கு எந்தப் பக்கம் பயனளிக்கிறதோ அந்த பக்கம் சாய்கிறீர்கள் எப்போதும் “நான், நான், என்று உங்களை ” பற்றி!” மட்டும் நினைகிறீர்கள்.

தர்ஷாவுக்கு இது தகுதியான Elimination. முற்றிலும் முதுகெலும்பு இல்லாத ஆள். அவளை கேலி செய்த ஆண்களுக்கு ஒரு சொம்புவாக மாறியவர் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா நான் இரண்டு மாதங்களுக்கு வேண்டிய உடைகளை எடுத்து வந்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் Eliminate ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று அழுதது இவருக்கு எதிராக வோட்டிங் போட்ட ரசிகர்களையே Feel பண்ண வெச்சிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

அரசியல் பாம்பை பிடித்து ஆட அரம்பிச்சிடேன்..

செஞ்சி அருகே வேணில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் தப்பி ஓட்டம் போலீஸ் விசாரணை